கவுந்தப்பாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கவுந்தப்பாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.;

Update:2023-09-23 03:13 IST

கவுந்தப்பாடி

சுவுந்தப்பாடியில் இந்து முன்னணி சார்பாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டன. பின்னர் இவற்றை நேற்று வாகனங்களில் வைத்து கோபி-சத்தி ரோட்டில் உள்ள கவுந்தப்பாடி புதுமாரியம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

அதன்பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. பின்னர் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று பெருந்தலையூர் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்