பெரியகுளத்தில்பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-02-14 18:45 GMT

பெரியகுளம் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நகர் நல அலுவலர் அரவிந்த கிருஷ்ணன் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர் மற்றும் பணியாளர்கள் வடகரை, தென்கரை பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்