தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-11 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கரும்பன் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலகுழு உறுப்பினர் ஞானசேகர், மாவட்ட துணைச்செயலாளர்கள் பாபு, பாலமுருகன், ஏ.ஐ.டி.யு.சி கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகர், மாடசாமி, பாலசிங்கம், சுப்பிரமணியன், பரமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்