தூத்துக்குடியில்மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

தூத்துக்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி இறந்து போனார்.;

Update:2023-07-22 00:15 IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 4-ம் கட்டளையை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நாகர்கோவிலை சேர்ந்த ஒப்பந்தக்காரரிடம் பணியாற்றி வந்தார். அதன்படி தூத்துக்குடி வட்டக்கோவில் அருகே புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் சவரிமுத்து வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் கட்டிடத்தின் மாடியில் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக சவரிமுத்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சவரிமுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்