போடியில் தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை

போடியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.

Update: 2023-02-07 19:30 GMT

போடியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் சோதனை

மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மைக்கேல் ஜெரால்டு, தேனி வருமான வரி அலுவலர் அம்பேத்கர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் போடிக்கு வந்தனர். அப்போது அவர்கள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.

அதன்படி, ஒரு குழுவினர் போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஏலக்காய் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 1 மணி நேரம் அவர்கள் சோதனை செய்தனர். மற்றொரு குழுவினர் போடி சந்தைப்பேட்டையில் உள்ள மற்றொரு ஏலக்காய் கடையில் சோதனை நடத்தினர். அங்கும் சுமார் 1 மணி நேரம் சோதனை நடந்தது. மேலும் ஒரு குழுவினர் போடியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சென்று சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தனியார் மருத்துவமனை

இதேபோல் போடி பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒரு குழுவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மதியம் 2 மணி அளவில் சென்று சோதனை நடத்தினர். அவர்கள் இரவு வரை அங்கு சோதனை மேற்கொண்டனர். 4 இடங்களில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போடியில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்