புதுக்கோட்டை நகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-03-29 18:44 GMT

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்பட அடிப்படை கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கூட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் உயர்த்துதல் என்பது உள்பட 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே ரூ.9 கோடியில் அமைக்கப்படும் நகராட்சி பூங்காவிற்கு கருணாநிதி பெயர் சூட்ட நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானங்கள் அனைத்தும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் அமுதா, ராஜேஸ்வரி ஆகியோர் கருப்பு சேலை அணிந்து நகர்மன்ற கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்பட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்