ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-01 18:45 GMT

ஓசூர்:

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கனமழை

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 851 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வந்து படிப்படியாக அதிகரிக்க தொடாங்கியது. அதன்படி நேற்று கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 908 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுடன் செல்கிறது.

விவசாயிகள் கவலை

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் மதகில் இருந்து நுரை பொங்கி தண்ணீர் வெளியேறுகிறது.

மேலும், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் நுரை பொங்கி துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்