புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கேமரா பொருத்தும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-07 19:29 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதிநவீன கேமரா

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டு எருமைகள், மான், சாம்பல் நிற அணில்கள் உள்ளன. அதிக வனவிலங்குகளையும், மிகப்பெரிய பள்ளத்தாக்குகளையும் கொண்ட பகுதியாக மேகமலை புலிகள் காப்பகம் விளங்குகிறது.

இந்த புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அப்போது இங்குள்ள அரிய வகையான பறவைகளின் எண்ணிக்கை பற்றி தெரியவரும். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

புலிகள் நடமாட்டம்

40-க்கும் மேற்பட்ட பீட்டுகளில் 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகம், மேகமலை, மதுரையில் உள்ள புலிகள் காப்பக இயக்குனர் அலுவலகம் ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ள டி.வி. மூலம் கண்காணிக்கலாம். வனவிலங்குகள் அதிலும் குறிப்பாக புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க இந்த நவீன கேமராக்கள் பயன்படுத்தப்படும். மேலும் இந்த கேமராக்கள் மூலம் வனபகுதிகளுக்குள் தீவிரவாத கும்பலோ அல்லது கஞ்சா பயிரிடும் கும்பலோ அத்துமீறி நுழைந்தாலும் வனத்துறை கேமராக்கள் மூலம் எளிதில் காணமுடியும். இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்