திருச்செந்தூரில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: பைக், பணம் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார், அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்தவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், காயல்பட்டினம் பகுதியினை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவா (வயது 48) என்பதும், மது பாட்டில்களை பைக்கில் மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்கள், ரூ.66 ஆயிரத்து 500 மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.