இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. என்ன காரணம்..?
இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும். ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பரபரக்கும் அரசியல் களம்... கூட்டணிக்காக பல்வேறு கட்சிகள் த.வெ.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தை
தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சீபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார்.
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: 4 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த விமான போக்குவரத்து இயக்குனரகம்
இண்டிகோ விமான சேவை பாதிப்பு தொடர்பாக 4 அதிகாரிகளை விமான போக்குவரத்து இயக்குனரகம் சஸ்பெண்டு செய்துள்ளது. புதிய விமான விதிகளை இண்டிகோ செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க விமான செயல்பாட்டு ஆய்வாளர்களான 4 அதிகாரிகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நியமித்திருந்தது. இந்த அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறி, லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட காரணமாக அமைந்ததால் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு - அன்புமணி ராமதாஸ்
மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு என்று அன்புமணி கூறியுள்ளார்.
நாட்டில் 3,104 தரமற்ற, 245 போலியான மருந்துகள் கண்டுபிடிப்பு; ஜே.பி. நட்டா தகவல்
நாட்டில் தரமற்ற, கலப்பட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகம் ஆகியவை தொடர்பாக 961 வழக்குகள் பதிவாகி உள்ளன.
சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள்: திருமாவளவன் பேச்சு
அம்பேத்கர் இயக்கங்களை வெறும் சாதி சங்கங்களாக காணாமல் அவற்றை இடதுசாரிமயமாக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தீப விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் அடையாள உண்ணாவிரதம்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு
ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் அரசியலில் இறுதி முடிவு தொடர்பாக டிசம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம் அமித்ஷாவை சந்தித்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்க அரசியல் நிகர்வாக பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.