இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

வாகனம் பழுதுபார்க்கும் கடையில் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-10 00:13 IST

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 62). இவர் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகனம் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இந்த கடையின் முன்பு வைத்திருந்த 237 கிலோ எடையுள்ள இரும்புப்பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடுபோனது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரமாகும்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்புப்பொருட்களை திருடியதாக புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டை சேர்ந்த குமார் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்