நீதிமன்றத்துக்கு முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

நீதிமன்றத்துக்கு முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-17 18:25 GMT

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள், வழக்காடிகள் முகக்கவசம் அணிந்து வந்தனர். அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. முககவசம் அணியாதவர்களை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வக்கீல்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும், என்று நீதிமன்றம் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்