அம்மன் கோவிலில் நகை திருட்டு

களக்காடு அருகே அம்மன் கோவிலில் நகை திருடப்பட்டது.;

Update:2023-07-04 00:40 IST

களக்காடு:

களக்காடு அருகே எஸ்.என்.பள்ளிவாசலில் குத்துப்பிறை இசக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு 1¾ பவுன் எடையுள்ள தங்க தாலி அணிவிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று சிறப்பு வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலை திறந்தபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலியை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை அறிந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் நிர்வாகி களக்காடு அண்ணாசாலை வியாசராஜபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் மகன் ரகுராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்