விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை- பணம் திருட்டு

விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை- பணம் திருடுபோனது.

Update: 2023-07-22 18:45 GMT

விழுப்புரம் அருகே பனங்குப்பம் கட்டபொம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் புதுச்சேரியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ராஜ்குமாரின் மனைவி மோட்சமேரியும், மைத்துனர் மனைவி விமலாமேரியும் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டனர். பின்னர் அன்று இரவு 7 மணிக்கு ராஜ்குமார், தனது வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரிக்கு பணிக்காக சென்று விட்டார். அவர் நேற்று மதியம் 1.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை, 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜ்குமார், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்