பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.;
ராமநாதபுரம்
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மனைவி சீதாம்மாள் (வயது 82). இவர் தனியார் பஸ்சில் ராமநாதபுரம் வந்தார். அவர் அங்குள்ள சிக்னலில் இறங்கும்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை.
அதை மர்ம ஆசாமிகள் பறித்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.