காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பனப்பாக்கத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2023-06-07 17:45 IST

காளத்தீஸ்வரர் கோவில்

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ஞானாம்பிகை உடனாகிய காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் தொடங்கியது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி காலை 9 மணியளவில் கணபதி ஹோமம், யாக சாலை பிரவேச பூஜைகளும், மாலையில் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பட்டிமன்றம் நடந்தது. இரண்டாவது நாளான 6-ந் தேதி காலை 9 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

அதிகாலையில் நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கலசநீரை எடுத்துசென்று, கருவரை கோபுர விமானங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சுதாகர், சத்தியநாராயணன், பாரதிதாசன், தமிழ்நாடு காவல் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி. விஸ்வநாதன், சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. முனிரத்னம், சப்-கலெக்டர் பாத்திமா, மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்