கண்ணப்ப நாயனார் கோவில் குடமுழுக்கு
உம்பளச்சேரி கண்ணப்ப நாயனார் கோவில் குடமுழுக்கு நடந்தது.;
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில் கண்ணப்ப நாயனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடந்தது. முன்னதாக பூர்வாங்க பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில் கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் மேல் உள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் கோவிலின் உள்ளே உள்ள மூலவர் கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.