கபிஸ்தலம் செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு

கபிஸ்தலம் செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு;

Update:2023-08-19 02:10 IST

கபிஸ்தலம் காவிரி படுகை தென்கரையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 17-ந்தேதி விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. நேற்று விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜைகள், வேத பாராயணம், ஹோமம், பூர்ணாஹுதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கபிஸ்தலம் காவிரி படுகை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்