காணொலிக்காட்சியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

காணொலிக்காட்சியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2022-11-21 00:15 IST

இளையான்குடி, 

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தலின்படி பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரியில் காணொலிக் காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் மற்றும் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் பீர்முகமது ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்