பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.;

Update:2023-10-08 00:30 IST

கடையம்:

தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டி வீரசிகாமணி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி வெர்ஜினியா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமும், 12-ம் வகுப்பு மாணவன் தீக்ஷித் மதன் உயரம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடமும் பிடித்தனர். இந்த மாணவன் மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அந்தோணிபாபு, முதல்வர் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியர் மீராள், உடற்கல்வி ஆசிரியர்கள் பேச்சிமுத்து, விஷ்ணு ப்ரியா, நவின் உள்பட பலர் பாராட்டினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்