வெளிநாட்டுக்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் மாணவருக்கு பாராட்டு

வெளிநாட்டுக்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-04-18 18:48 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டு, கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர் நித்திஷ்குமார் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, பின்னர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற நித்திஷ்குமார் உள்பட 25 மாணவர்கள் வெளிநாடு கல்வி பயணம் செல்ல உள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர் நித்திஷ்குமார் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ் கலந்து கொண்டு மாணவர் நித்திஷ்குமாருக்கு நினைவு பரிசு வழங்கி, பாராட்டினார். இதில் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்