மாநில கபடி போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

மாநில கபடி போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-07-27 19:00 GMT

மானாமதுரை

மானாமதுரை செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற தகுதித்தேர்வு போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணியில் இடம் பிடித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி கோவாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற இந்த மாணவர்கள் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

இந்த அணியில் இடம் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.35 ஆயிரமும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.இவர்களை பள்ளி செயலாளர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோசப் பெட்சி, முதல்வர்கள் பிருந்தா, வள்ளி மயில், உடற்கல்வி ஆசிரியை கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்