உலக அளவிலான தடகளப்போட்டி: 4 பதக்கம் வென்று குமரி பெண் போலீஸ் சாதனை...!

உலக அளவிலான தடகளப்போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்ற குமரி பெண் போலீசுக்கு மாவட்ட போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2022-08-06 10:31 GMT

நாகர்கோவில்,

நெதர்லாந்தில் உலக அளவில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றன. இந்த தடகள போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்.

இதில் இந்திய அணியின் குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றம் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணரேகாவும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்.

இவர் உயர தாண்டுதல், 100 மீட்டம் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகளில் 3 தங்கமும், ஒரு வௌ்ளி பதக்கமும் வென்றார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெதர்லாந்தில் உள்ள கிருஷ்ணரேகா இன்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு கோட்டார் ரெயில் நிலையத்தில் வைத்து குமரி மாவட்ட போலீசார் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பூங்கொத்து கொடுத்து பெண் போலீஸ் கிருஷ்ணரேகாவை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீசார் அவரை வரவேற்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்