முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.;

Update:2023-04-27 00:15 IST

மூங்கில்துறைப்பட்டு:

பொரசப்பட்டு மேல்பாக்கம் புதூர் கிராமத்தில் புதிதாக முத்துமாரியம்மன், கங்கைஅம்மன், பராசக்தி விநாயகர், பாலமுருகன், நாகாத்தம்மாள் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி யாக சாலையில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கங்கை அம்மன், பராசக்தி, விநாயகர், பாலமுருகன், நாகாத்தம்மாள் உள்ளிட்ட கோவில்களில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்