ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
ஆற்காடு அருகே ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.;
ஆற்காடு தோப்புக்கானா முனுசாமி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32) கூலி தொழிலாளி. இவர் கடந்த 31-ந் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆற்காட்டில் இருந்து ஆரணி சாலையில் சென்றபோது குறுக்கே வந்த ஆட்டோ மீது முனுசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனிசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.