இளம் பெண்ணை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது

இளம் பெண்ணை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது சய்யப்பட்டார்.;

Update:2022-08-15 22:46 IST

ஆம்பூர் ரொட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பு (வயது 20). இவர், 'ஷூ' கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் தாய் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்புவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்