போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது

போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-08-22 17:20 GMT


விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூரை சேர்ந்தவர் பண்டேரி மனைவி குப்பச்சி (வயது 76). இவர் உயிருடன் இருக்கும்போதே அதே கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மகன் மோகன் (27) என்பவர் குப்பச்சி இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் பெற்றதோடு மோகன், அவரது தாய் கோதாவரி, தங்கை சுகன்யா ஆகியோர் சேர்ந்து குப்பச்சிக்கு சுரேஷ் என்பவர் வாரிசாக இருப்பதை மறைத்து போலியான வாரிசு சான்றிதழ் பெற்றும் குப்பச்சிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குப்பச்சி, விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மோகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்