லேப்-டாப் திருடியவர் சிக்கினார்
பேட்டையில் லேப்-டாப் திருடியவர் சிக்கினார்.;
பேட்டை:
பணகுடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35). இவர் நேற்று நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் லேப்டாப் வைத்துவிட்டு கடையின் உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த லேப்-டாப்பை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பேட்டை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், பேட்டை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ஜாபர் அலி (34) என்பவர் லேப்-டாப் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, லேப்டாப்பையும் மீட்டனர்.