சட்டம் தான் காவலர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க காவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-08-29 14:32 GMT

சென்னை,

927 பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழாவில் காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவலர்களின் சேவை மனப்பான்மைக்கு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாடு காவல் பயிற்சியகம் காவலர்களுக்கு தரமான பயிற்சியை வழங்கி உள்ளது.

பெண் காவலர்கள் அதிக அளவில் பயிற்சி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. பாரதியாரின் வாக்கினைப் போல பெண் ஆய்வாளர்கள் பயிற்சி எடுத்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க காவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

சட்டம் தான் காவலர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு, சட்டத்தை சரியாக நிலைநாட்ட வேண்டும்.குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக்காகூடாது அதேநேரத்தில் நிரபராதி ஒருவர் கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது.சட்டம் -ஒழுங்கை பேணுதல் காவலர்களின் கடமை. சட்டம் தான் காவலர்களை வழிநடத்தும் ஒளி விளக்கு.

சமுதாயத்தில் பின் தங்கியவர்களை பாதுகாக்கும் பணி காவலர்களுடையது. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த காவலர் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை நிறைவேறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்