தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13-ந்தேதி உலக உடலுறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது.

Update: 2023-08-13 10:39 GMT

சென்னை,

உடலுறுப்புகளை தானம் செய்வதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13-ந்தேதி உலக உடலுறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக உடலுறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் உலக உடலுறுப்பு தான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்