10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு முதல்-அமைச்சர், நீதிபதிக்கு கடிதம்

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கேட்டு முதல்-அமைச்சர், நீதிபதிக்கு பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-31 11:44 GMT

மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. பல்வேறு போராட்டங்கைள நடத்தி வருகிறது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதி பாரதிதாசன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பா.ம.க.வினர் பள்ளிக்கொண்டாப்பட்டில் கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஆர்.முருகன், பா.ம.க. சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் க.பாலு, மாவட்ட துணை செயலாளர் அண்டம்பள்ளம் ஆர்.ரவிசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பக்தவச்சலம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் கலந்துகொண்டார். பள்ளிக்கொண்டாப்பட்டு க.குப்புசாமி கவுண்டர் நினைவு உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்று அங்குள்ள தபால் நிலையத்தை அடைந்தனர். பின்னர் அங்கு கடிதங்களை அனுப்பினர். இதில் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்