விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் சேதம்

விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் சேதம் போலீசார் விசாரணை

Update: 2023-04-18 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள சொர்ணாவூர் கீழ்பாதி ஏரிக்கரையோரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் அக்கட்சியினர் கடந்த 14-ந் தேதியன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கட்சி கொடியேற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள், அந்த கொடிக்கம்பத்தை கழற்றி போட்டுவிட்டு அந்த கம்பத்தின் அடிச் சுவரை சேதப்படுத்தி மஞ்சள் நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலிஞ்சிக்குப்பம் முகாம் அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் நேற்று வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்