தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
பரமத்தியில் தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள பரமத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி பரமத்தி வட்டார வள மையத்தில் நடைபெற்றது. பரமத்தி வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இம் மையங்களில் ஆசிரியராக பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை பரமத்தி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் சியாமிளா கவுரி, வக்கீல் செல்வமணி ஆகியோர் சட்டம் சார்ந்த கல்வி அறிவு, உடல் நலம் மற்றும் சுகாதாரம் திறன் மேம்பாடு, சுய உதவிக் குழு போன்ற துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சியளித்தனர். பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் அனிதாகுமாரி, ராஜா, பார்வதி மற்றும் செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.