ஊட்டி
ஊட்டி அருகே தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் தேனாடுகம்பை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகப்படும் படியாக சுற்றிதிர்திரிந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த பையில் 40 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தொட்டபெட்டா சிங்கோனா பகுதியை சேர்ந்த சுப்ரமணி (வயது 46) என்பதும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.