மது விற்றவர் கைது; 33 மது பாட்டில்கள் பறிமுதல்

மது விற்றவர் கைது செய்யப்பட்டு, 33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-18 19:30 GMT

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில் பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டு, எம்.ஜி.ஆர். நகர் அருகே இருந்த முட்புதருக்கு அருகில் அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த காமராஜை(வயது 47) கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது அரசு அனுமதியின்றி மதுபான பாட்டில்களை விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 94981 00690 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்