லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-11-21 00:15 IST

ஊட்டி,

ஊட்டி அருகே எம்.பாலாடா பஜார் பகுதியில் லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி விற்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் இத்தலார் பகுதியை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்