காலை நடைபயிற்சிக்குப் பின், கார் ஓட்டி மகிழ்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.;

Update:2026-01-10 10:58 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான காலை நடைபயிற்சிக்கு பிறகு விண்டேஜ் காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார். இதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் டி.ஆர்.பி.ராஜா கூறி இருப்பதாவது;

”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களை அவர் விரும்புகிறார். இன்று அவர் அதைத்தான் செய்தார். இன்று காலை, அழகான 'பியட் செலக்ட்' காரை சாதாரணமாக ஓட்டிச் சென்றார். தலைவருக்கு பியட் கார் என்றால் மிகவும் பிடிக்கும்!.” என அதில் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்