லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது;

Update:2023-08-11 02:03 IST

களியக்காவிளை:

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அரசு தடை செய்துள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுகள் அரசின் அனுமதியுடன் விற்கப்பட்டு வருகின்றது. இதனை சாதகமாக பயன்படுத்தி லாட்டரி விற்பனையாளர்கள் கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் களியக்காவிளையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழிவிளை பகுதியை சோ்ந்த செய்யதலி (வயது 35) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.40 மதிப்புள்ள 35 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1810-யை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்