லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Update: 2022-11-23 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிபடை போலீசார் தேத்தாகுடி தெற்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஷாகுல் ஹமீது(வயது52) என்பவர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஷாகுல்ஹமீதை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன், லாட்டரி சீட்டுகள், ரூ. 9ஆயிரத்து 150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்