பராமரிப்பற்ற பூங்கா - உடற்பயிற்சி கூடம்

அருப்புக்கோட்டை அருகே பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-22 19:22 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர் பூங்கா

அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையை ஒட்டி பந்தல்குடி அமைந்துள்ளது. இங்கு அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் நன்றாக பயன்பட்டு வந்த இந்த பூங்கா நாளடைவில் முறையான பராமரிப்பு இன்றியும் போதிய பாதுகாப்பு வசதியும் இல்லாத காரணத்தால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

தற்போது பூங்காவை முட்புதர்கள் சூழ்ந்துள்ளதோடு பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி முற்றிலுமாக பலமிழந்து கீழே விழுந்து கிடக்கிறது.

விளையாட்டு உபகரணங்கள்

உடற்பயிற்சி கூடத்தில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலையில் வெறுமையாக காட்சி அளிக்கிறது. நன்றாக செயல்பட்டு வந்த பூங்கா, உடற்பயிற்சிக்கூடம் இப்படி பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் இ்ன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே சேதமடைந்து கவனிப்பாரின்றி கிடக்கும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்