மானாமதுரையில் மதுக்கடையில் திருடியவர் சிக்கினார்
மானாமதுரையில் மதுக்கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
மானாமதுரை
மானாமதுரை கண்ணார் தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மதுக்கடையில் திருடியது தொடர்பாக திருப்புவனம் அருகே வடகரையை சேர்ந்த செல்வக்குமார்(வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.