சென்னையில் வீசும் பலத்த காற்று - ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி சேதம்...!

சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேசிய கொடி பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்தது.

Update: 2022-12-09 10:31 GMT

சென்னை,

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு, நாளை அதிகாலை நேரத்தில் மாமல்லபுரத்தை ஒட்டி பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என்பதால் மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேசிய கொடி பலத்த காற்றின் காரணமாக சேதம் அடைந்தது. உடனடியாக தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய ராணுவ அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து செயல்பட்டு ராணுவ அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் சேதம் அடைந்த தேசிய கொடியை மாற்றி மீண்டும் பறக்கவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்