அயோத்தியாப்பட்டணம் அருகே அரசமரம், வேப்ப மரத்திற்கும் திருமணம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அயோத்தியாப்பட்டணம் அருகே அரசமரம், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-06-10 21:12 GMT

அயோத்தியாப்பட்டணம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசமரம், வேப்பமரம் ஆகியவற்றுக்கு திருமணம் நடைபெற்றது. பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் மாப்பிள்ளை வீட்டாராகவும், மற்றொரு தரப்பினர் பெண் வீட்டாராகவும் இருந்து பொதுமக்கள் சார்பாக திருமணத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக பாழி எடுத்தல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்