மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-03-08 01:27 IST

ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட எம்.கூடலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் 1995-ம் ஆண்டு 59 ேபருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான நமுனா வழங்கப்பட்டது. ஆனால் 28 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை இடத்தை அளவீடு செய்து கொடுக்காமலும், பட்டா வழங்காமலும் உள்ளனர். பலமுறை மனு கொடுத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக அளவீடு செய்து பட்டா வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.கூடலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் வசதி, சுற்றுசுவர் கட்டி தர வேண்டும். முத்தரசநல்லூர் ஊராட்சியில் மருத்துவருடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சியின் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்