நீட் தேர்வை ரத்து செய்யப்படும் வரை சேலத்தில் ம.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், சேலம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கோட்டை பகுதியில் நேற்று மதியம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத்தில் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என்றும், ஒருநாள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் மாலை 6 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.