மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!

மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது.

Update: 2023-07-16 01:21 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் இன்று காலை 10 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை வெளியிடுகிறார்.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9, 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ல் நடைபெறும். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பா் 21-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார். தொடா்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அமைச்சர் அறிவிக்கவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்