மக்களை தேடி மருத்துவ முகாம்
கண்ணமங்கலம் அருகே மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சி சாமந்திபுரம் காளியம்மன் கோவில் அருகே மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மேற்பார்வையில், நடமாடும் மருத்துவர் கார்த்திக், சுகாதார மேற்பார்வையாளர் கோ.தமிழரசன், மக்களை தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர் தரணிதரன், கிராம சுகாதார செவிலியர் தகாசின்பானு உள்பட சுகாதார பணியாளர்கள் கலந்துகொணடு, 100 நாள் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.