மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா 

ஆற்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா  நடந்தது.

Update: 2023-09-16 15:03 GMT

ஆற்காடு

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ஆற்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பி.என்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார்.

நகர தி.மு.க. செயலாளர் ஏ.வி.சரவணன், நகரமன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளகொடி சரவணன், முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் பொன்.ராஜசேகர், நகர  துணை செயலாளர்கள் சொக்கலிங்கம், ரவி, ருக்மணி, மாவட்ட பிரதிநிதி ஆர்.கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெயபிரகாசிடம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்