ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update:2023-09-16 00:57 IST

அண்ணா பிறந்த நாள் விழா, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேக்கநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர் கோகிலாகண்ணதாசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நோயாளிகளின் எடை பார்க்கும் எந்திரம், உயரம் பார்க்கும் கருவி கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவத்திற்கு தையல் போட தேவையான மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். சத்தியபிரகாஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்