அறங்காவலர் குழு நியமனத்திற்குப் பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்

மனிதர்களே மனிதக் கழிவுகளை எடுக்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.;

Update:2023-09-24 21:02 IST

மதுரை,

மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மனிதர்களே மனிதக் கழிவுகளை எடுக்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறங்காவலர் குழு நியமனத்திற்குப் பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்